வெள்ளி, 10 நவம்பர், 2017

வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்கச் சென்ற அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்! November 10, 2017

Image

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்கச் சென்ற அமைச்சர் எம்.சி.சம்பத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வாராமல் நீர் திறப்பதனால் எந்த வித பலனும் அளிக்காது  என விவசாயிகள் முறையிட்டனர். தொடர்ந்து அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரியின் நீர் மட்டம் 47.05 அடியாகும். தற்போது ஏரியின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக 30 மதகுகள் வழியாக 400 கன அடி தண்ணீரை  தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

Related Posts: