
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆண்டுதோறும் 65லட்சம்பேர் உயிரிழப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் உலகில் நேரும் உயிரிழப்புகளில் ஒன்பதில் ஒன்று காற்றுமாசுபாட்டால் நேரிடுவதும் தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஆண்டுதோறும் 17லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில் நான்கில் ஓர் உயிரிழப்பு சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படுவதாக ஐநா சுற்றுச்சூழல் அவை தெரிவித்துள்ளது