ஞாயிறு, 5 நவம்பர், 2017

“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் வெள்ளத்தை தடுத்திருக்க முடியும்” - டி.டி.வி. தினகரன்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் வெள்ளத்தை தடுத்திருக்க முடியும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினரை சந்தித்து தினகரன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடுங்கையூரில் மின்பெட்டிகளை மாற்ற வெற்றிவேல் மனு கொடுத்ததாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். 

உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கினால் போதாது என்றும், முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார். அமைச்சர்கள் தங்களை காத்துக்கொள்வதற்காக ஆய்வு நடத்தி வருவதாகவும், வெள்ளம் வந்த பிறகுதான் முதலமைச்சர் பார்க்கவே செல்வதாகவும் கூறினார். தமிழகத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் ஆட்சி நடைபெறுவதாகவும் விமர்சித்தார்.
Image