சனி, 4 நவம்பர், 2017

கூடுவாஞ்சேரி பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் இடம் பெயர்வு!

Image

சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துவருகின்றனர். 

கூடுவாஞ்சேரி, ஆதனூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பிவருவதால் உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளதால் மக்கள் வேறு பகுதிக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், பேரிடர் மீட்புக்குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts: