சனி, 4 நவம்பர், 2017

​முழு கொள்ளளவை எட்டும் நிலையில் மதுராந்தகம் ஏரி!

Image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய எரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக உள்ள மதுராந்தகம் ஏரியால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

இந்நிலையில், மதுராந்தகம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரியின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 20.6 அடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஏரியின் முழு கொள்ளளவனான 23 அடியை ஒரு சில தினங்களில் எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts: