திங்கள், 13 நவம்பர், 2017

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் படகு - சூழலியல் அக்கறையால் விளைந்த கண்டுபிடிப்பு! November 11, 2017

Image

கென்யாவில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து படகு தயாரித்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கடற்கறைக்கு பெயர் பெற்ற கென்யாவின் லாமு என்கிற தீவில் அதிகளவு பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் சேர்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனைக் கண்ட  பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர் பென் மோரிசன் லாமு என்பவர் லாமுத் தீவில் படகு கட்டும் தொழில் செய்துவரும் அலி அப்துல்லா என்பவருடன் இணைந்து ப்ளாஸ்டிக் கழிவுகளில் இருந்து படகு தயாரித்து வருகிறார்.

கென்யாவின் லாமு என்கிற தீவு கடற்கரை அழகுக்குப் பெயர்பெற்றதாகும். யுனெஸ்கோ பாரம்பரிய நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்நிலையில் அண்மைக்காலமாக இங்குப் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் அதிகமாகி வருகின்றன.

நிலத்தில் வீசப்படும் கழிவுகளைத் தின்னும் கழுதைகள், மாடுகள் அவற்றைச் செரிக்க முடியாமல் உயிரிழக்கின்றன. இதேபோல் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதைக் கண்ட பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர் பென் மோரிசன் லாமு தீவின் சுற்றுச்சூழலைக் காக்க என்ன செய்யலாம் என ஆராய்ந்து பார்த்தார். லாமுத் தீவில் படகு கட்டும் தொழில் செய்துவரும் அலி அப்துல்லா என்கிற இளைஞரைச் சந்தித்தார்.

படகு கட்டுவதற்கு மரத்துக்குப் பதில் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கித் தயாரித்த பாளங்களைப் பயன்படுத்தலாமே என ஆலோசனை கூறினார். இதற்கு அவரும் உடன்படவே பழைய பொருட்களைச் சேகரிப்பவர்கள் மூலம் அவற்றை வாங்கி ஆலையில் அரைத்து உருக்கிப் பாளங்களாக்கிப் படகு கட்டும் தொழிலில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் படகுகளை லாமுத் தீவில் இருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்குச் சுற்றுலாவுக்கு இயக்கத் திட்டமிட்டுள்ளனர். 44வயதாகும் அலி அப்துல்லா தான் சிறுவனாக இருந்தபோது இந்தக் கடற்கரை எந்தக் கழிவுகளும் இல்லாமல் எழிலுடன் தோற்றமளித்ததாகவும், இப்போது அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை எனக் கவலையுடன் தெரிவித்தார்.