திங்கள், 13 நவம்பர், 2017

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிப்பு..! November 13, 2017

Image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில், அடுத்த ஆண்டு 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படும், என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உடுமலை ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர், அங்கு அரசு மருத்துமனையில், திடீரென ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களிடம், நலம் விசாரித்த அவர்கள், நெல்லை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில், அடுத்த ஆண்டு 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Related Posts: