திங்கள், 13 நவம்பர், 2017

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு! November 13, 2017

Image

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீனவர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேஸ்வரத்தில் இருந்து ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, ராணி அபாக்கா என்ற இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 3 படகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்க மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ரப்பர் குண்டுகளை வைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை என்பவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை மீனவர்கள் தான் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய கடலோர காவல் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர படையினரே துப்பாக்கிச்சூடு நடத்திய இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை மீனவர்கள் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எந்த செய்தியும் வெளிவந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்திய எல்லையை தாண்டி வரும்போது அவர்களை இந்திய காவல்படையினர் கைது செய்வதே வழக்கம்.

Related Posts: