
கன்னியாகுமரி மாவட்டம் அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகளில் மலையாள எழுத்துக்கள் மற்றும் முத்திரைகளை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த போது மலையாளம் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் கோவில்கள், பத்மநாபபுரம் பகுதியில் உள்ள மன்னர் வாழ்ந்த அரண்மனை போன்றவையும் சமஸ்தானத்தின் கீழ் இருந்தன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்து 62 ஆண்டுகள் ஆன பின்பும் அங்குள்ள அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகளில் மலையாள எழுத்துகள் மற்றும் கேரள அரசின் முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.