செவ்வாய், 14 நவம்பர், 2017

ஆபத்தான நிலையில் படகில் பயணம் செய்யும் மாணவர்கள்! November 14, 2017

Image

வேதாரண்யம் அருகே கனமழை காரணமாக கிராமப் பகுதியை நீர் சூழ்ந்ததால் 
ஆபத்தான நிலையில் மாணவர்கள் படகில் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.


வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்டது வண்டல் மற்றும் குண்டுரான்வெளி கிராமங்கள். இங்கு சுமார் 750 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அண்மையில் பெய்த கன மழை காரணமாக இப்பகுதி முழுவதும் கடந்த 10 நாட்களாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் தினமும் தலைஞாயிறு பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் ஆபத்தான நிலையில் படகில் பயணம் செய்து வருகின்றனர். 20 பேர் பயணிக்க வேண்டிய படகில் 30 பேர் வரை பயணிப்பதாக கூறப்படுகிறது. எனவே உயிர் காக்கும் கவசம்கூட  இன்றி தினமும் அச்சத்தோடு பயணம் செல்லும் தங்களுக்கு அதிகாரிகள் கூடுதல் படகு மற்றும் உயிர்காக்கும் கவசம் ஆகியவை ஏற்பாடு செய்து தர வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: