புதன், 15 நவம்பர், 2017

ஜிஎஸ்டியால் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு! November 15, 2017

Image

ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுகளை முடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேருவின் உருவப்படத்திற்கு முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, நாட்டு மக்களை ஏமாற்றி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்து விட்டதாக விமர்சித்தார். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசை எதிர்க்கும் மாநில அரசுகளை, ஆளுநரின் துணையுடன் மத்திய அரசு முடக்க நினைப்பதாகவும் குறிப்பிட்டார். 

Related Posts: