
மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது தொடர்பான வீடியோ ஆதாரம் உள்ளதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக சந்தேகம் எழுப்பப்படும் என்பதால், வீடியோ எடுத்து ஆதாரமாக வைக்குமாறு ஜெயலலிதா கூறியதால், அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வருமான வரி துறை சோதனை நடத்தியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த திவாகரன், அவரவர் வேலையை அவரவர்கள் செய்வதாகவும் இதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் சசிகலாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, அவருக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வில்லை என்று திவாகரன் குற்றம் சாட்டினார். இதன் மூலம் மற்ற பெண்களுக்கு முன்னுதாரமாக சசிகலா மாறிவிட்டதாக திவாகரன் வேதனை தெரிவித்தார்.