
அடிப்படை கழிவறை வசதிகளின்றி வசிக்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.\
வாட்டர்எய்டு என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘அவுட் ஆப் ஆர்டர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்றும், அவர்கள் பொதுவெளி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று உலக கழிப்பறைகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.