
திவாலாகி விட்ட தமிழக அரசுக்கு முதலமைச்சர் தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள பாமக கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், 110 விதியின் அறிவிக்கப்பட்ட 75 சதவீத திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் லஞ்சத்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் திவாலாகி விட்டதாக தெரிவித்த அவர், ஜெயலலிதா வீட்டில் முன்பே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றார்.
சேகர்ரெட்டி, முன்னால் தலைமை செயலர் ராமமோகன ராவ் ஆகியோரது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை என்னாயிற்று என்று கேள்வி எழுப்பிய ராமதாஸ் TNPSC-போட்டி தேர்வுகளில் வெளிமாநிலத்தவரை அனுமதிப்பது தமிழர்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் செயல் எனவும் கண்டனம் தெரிவித்தார்.