
திருப்பூர் நொய்யலாற்றின் நீரை மழைக்காலங்களில் சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயண்படுத்தலாம் என பள்ளி மாணவ, மாணவியர் ஆய்வு நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் .
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய நொய்யல் ஆறு, கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சாலைகளின் கழிவு நீர் காரணமாக மாசடைந்து வருகிறது.
இதனால் விவசாயம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நொய்யல் நீரை பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில் திருப்பூர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் சிலர் நொய்யல் ஆறு குறித்து ஆய்வு நடத்தி அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நொய்யல் ஆற்றில் 15 ஆயிரம் கோடி லிட்டர் நீர் வீணாக கடலில் கலப்பதாகவும், இவற்றை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையை தமிழக அரசிற்கு அனுப்பியுள்ளதாகவும் மாணவியர் தெரிவித்துள்ளனர்.
நொய்யல் ஆறு தமிழக வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நொய்யல் ஆறு வழித்தடம், வணிக வழியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.