பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், தற்போது சிங்கத்தை விட பசுவை கண்டுதான், பொதுமக்கள் அதிகம் பயப்படுவதாக, லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் மோடி ஆட்சி குறித்து, நகைச்சுவையான பாணியில் இவ்வாறு விமர்சித்தார். வாகனங்களில் பசுவை ஏற்றிச் சென்றதால், பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களை உதாரணமாக சுட்டிக்காட்டிய லாலு, இத்தகைய நிகழ்வுகளால் புகழ்பெற்ற சோனிப்பூர் கால்நடைச் சந்தைக்கு கூட விற்பனைக்கு யாரும்
மாடுகளை அழைத்து வருவதில்லை என்றார்.
மேலும், மாமிசம் உண்ணும் சிங்கத்தை கண்டு அச்சப்பட்ட பொதுமக்கள், தற்போது மாடுகளை கண்டு, அதைவிட அதிகம் பயப்படுவதாக குறிப்பிட்டார். இதுதான் பொதுமக்களுக்கு மோடி அரசின் பரிசு என்றும் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தார்.
source: NS7 tv