தமிழக அமைச்சர்களின் பேச்சு 23-ம் புலிகேசி படத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது, என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் மௌனம் காத்தாலே அவர்கள் பொறுப்பிற்கு மரியாதை என்றும், அமைச்சர்களின் பேச்சுக்களால் அதிமுக தொண்டர்களிடையே மன வருத்தத்தையும் கெட்டபெயரையும் உண்டாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சோதனை மிகப்பெரிய நாடகம் எனவும், ஆளில்லலாத வீட்டில் ஆவணங்களை தேடி சென்றது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிம்பத்தை, மக்கள் மன்றத்தில் கெடுக்க கூடிய செயலாக தெரிவதாகவும் தெரிவித்துள்ளார். இச்சோதனை அதிமுகவை அழிக்கக்கூடிய செயல் எனவும், டிடிவி தினகரனும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அதிமுகவை காக்க தவறினால் தமிழகத்துக்கு பேரிழப்பு எனவும் தெரிவித்தார்.
source ns7.tv