செவ்வாய், 13 நவம்பர், 2018

​ட்விட்டரில் விரைவில் வரவிருக்கும் புதிய மாற்றம்! November 13, 2018

Image

ட்விட்டரில் விரைவில் எடிட் வசதி அறிமுகப்படுத்தப்படுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி கடந்த 9ம் தேதி இந்தியா வந்திருந்தபொழுது டெல்லி ஐஐடி மாணவர்களிடையே உரையாடல் நிகழ்த்தி இருந்தார். வாக்களித்தல் குறித்து மாணவர்களிடம் பேசிய அவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்பொழுது ட்விட்டரில் எடிட் வசதி அறிமுகப்படுத்தப்படுமா என கெட்கப்பட்ட கேள்விக்கு அதற்கான பரிசீலனை நடந்துகொண்டு வருகிறது என தெரிவித்தார்.

எடிட் வசதி கொடுக்கப்படுவதில் நன்மை மடுமல்லாமல் தீமையும் இருக்கிறது என குறிப்பிட்ட அவர், எழுத்துப்பிழையை சரிசெய்வதற்கு மட்டும் எடிட் வசதி பயன்படுத்தப்படப்போவதில்லை. இதன்மூலம் அவர்கள் பதிவிட்ட கருத்துக்களை மாற்றியமைக்கவும் முடிவும். இதனால் பல பிரச்சனைகள் உருவாகும் எனவும் குறிப்பிட்டார். ட்விட்டரில் எடிட் வசதி அறிமுகப்படுத்துவது குறித்து அவசரப்படவில்லை எனவும் ஜாக் தெரிவித்தார்