புதன், 17 ஜனவரி, 2018

119 கோடி ஆதார் அட்டை தாரர்களின் முகங்களை மீண்டும் ‘ஸ்கேன்’ செய்ய திட்டம்! January 15, 2018

Image

ஆதார் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆதார் அட்டைதாரர்களின் முகத்தையும் ஸ்கேன் செய்ய ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 119 கோடி பேருக்கு மேல் ஆதார் எண் வழக்கப்பட்டுள்ளது. வங்கி பரிவர்த்தனை, ரேசன் கார்டுகள், டெலிபோன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆதார் எண் விபரங்கள் வெளியானது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரின் முகத்தையும் கூடுதல் அடையாளச் சான்றாக பதிவு செய்ய ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான பணிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கும் எனவும் முகம் பதிவு செய்யப்படும்போது கைரேகை, கருவிழி அல்லது மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.