ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் ராஜஸ்தான் போலீசாரால் அதிரடியாக கைது! January 13, 2018

Image

சென்னை கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நாதுராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி கொளத்தூரில் நகைக்கடை மேற்கூரையை துளையிட்டு, தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நாதுராமை தேடி, தனிப்பபடை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் பாலி சென்றபோது, நடந்த துப்பாக்கிச்சூட்டில், மதுரைவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி உயிரிழந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பதுங்கியிருந்த நாதுராமை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.