கோவையில் ஏடிஎம் தொடர் கொள்ளை தொடர்பாக, கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த எட்டு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவையில் டிசம்பர் மாதம் 9, 10 ஆம் தேதிகளில் 3 ஏடிஎம் மையம்களில் நிகழ்ந்த தொடர்கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், கடந்த 14 ஆம் தேதி நாமக்கல் மற்றும் சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஜீல்பிகர், முஸ்டக், மோசப்கான், சுபேர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கோவை மாநகர காவல்துறையின் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் 8 பேர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.