ஞாயிறு, 14 ஜனவரி, 2018

தமிழக அரசு மீது சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றச்சாட்டு! January 14, 2018

சுனாமி நேரத்தில், ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையில் ஒரு பகுதியை கூட, ஒகி புயல் நேரத்தில் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓகி புயலால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர் மேதாபட்கர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சின்னதுறையில் கடலில் மாயமான மீனவர்களின் உறவினர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, சீனா, பாகிஸ்தான் எல்லையில் வெற்றியை கொண்டாடும் நாம், மீனவர்களை காப்பாற்ற என்ன செய்தோம் என கேள்வி எழுப்பினார். பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டும், அரசு எந்திரம் சரியாக செயல்பட்டிருந்தால் அதிகளவிலான மீனவர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறினார்.

சுனாமி நேரத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையில் ஒரு பகுதியை கூட ஒக்கி புயல் நேரத்தில் இன்றைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம் சாட்டினார்.
Image