புதன், 10 ஜனவரி, 2018

கோலாகலமாக நடைபெறும் பட்டம் விடும் திருவிழா! January 9, 2018

Image

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

கவுகாத்தியில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் 5 நாள் நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். நதிக்கரைகளை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது. 

விதவிதமாக வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் விடப்பட்ட பட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதுமட்டுமின்றி, பல்வேறு போட்டிகளுக்கும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.