வாய்ப்பு வந்தால் சட்டப்பேரவையில், மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ்
எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும், போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும், அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநர் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும், ஓகி புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன்களை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் கடன் சுமையால் தத்தளிக்கும் தமிழகத்தை மீட்க, “நிபுணர் குழுவை” அமைத்து, மாநில நிதி நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
மேலும் சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு, வாய்ப்பு வந்தால் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.