கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதன் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து கோழி மற்றும் முட்டைகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களுரில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக கார்நாடக மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கோழி, முட்டை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிய மருத்துவ சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச்சாவடியில் நோய் தடுப்பு மருந்து தெளிப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி தீவனம், கோழிகள் போன்றவைகளை ஏற்றி வரும் வாகனங்கள் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் கறி விற்பனை கர்நாடகாவில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், கர்நாடகாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக மகராஷ்டிர மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.