12 வயது சிறுவன் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் கடலை சுத்தப்படுத்தவும் புதிய கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹசாக் ஹசி. இவர், கடலில் இருக்கும் மாசுக்களை சுத்தப்படுத்தும் நோக்கிலும், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் விதத்திலும், கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளார். Evris என்று அந்த கப்பலுக்கு பெயர் வைத்து, TedEx, Ted8 போன்ற சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தி பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
கடல் நீரை உறிஞ்சி, அதில் இருந்து குப்பைகளையும் திடக்கழிவுகளையும் மட்டும் அகற்றும் விதமாக இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உறிஞ்சப்பட்ட கடல்நீரில் இருந்து, அளவு வாரியாக கழிவுகள் அகற்றப்படும் எனவும் அந்த கப்பலில் பொறுத்தப்பட்டுள்ள சென்சார், உயிரினங்களையும் மாசுப்பொருட்களையும் சரியாக கண்டுபிடிக்க உதவும் எனவும் கப்பலை வடிவமைத்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
கடல் மாசடைவது குறித்து நிறைய வீடியோக்களை பார்த்துள்ள ஹசி, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஏதாவது முயற்சி எடுக்கவேண்டும் என்ற நோக்கில் இக்கப்பலை வடிவமைத்ததாக தெரிவித்த அவரது பெற்றோர், இதுபோன்ற கப்பலை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம், ஹசிக்கு 9ம் வயதில் வந்தது என அவரது பெற்றோர் நெகிழ்ச்சியாக தெரிவித்தனர்.
source : ns7.tv