
source ns7.tv
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, பனங்கிழங்கு அமோக விளைச்சல் பெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சங்கரன் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான சிவகிரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் பனம் பழங்களின் கொட்டைகளை விதைத்து பனங்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட பனங்கிழங்குகள் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்தாண்டை விட இந்தாண்டு பனங்கிழங்கு அதிக வருவாய் ஈட்டிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.