புதன், 16 ஜனவரி, 2019

பேராசிரியர் பணியிடங்கள்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருவர் கூட இல்லை...அதிர்ச்சி தகவல்! January 16, 2019

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 40 மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிபுரிபவர்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியர் மற்றும் உதவி பேராசியராக பணியாற்றவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. 
இது தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், மொத்தம் 1,125 பேர் பேராசிரியர்களாக பணி புரிபுரியும் மத்திய பல்கலைக்கழகங்களில், பொதுப்பிரிவினர்  1071 பேர் பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த படியாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மொத்தம் 47 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் உள்ள 40 மத்திய பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக பணிபுரியவில்லை என தெரியவந்துள்ளது. இதே போல், மத்திய பல்கலைக்கழகங்களில், மொத்தம் 2620 பேர் உதவி பேராசிரியர்களாக உள்ளனர். 
அவர்களில், பொதுப்பிரிவினர் 2434 பணிபுரிவதும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் கிடைத்துள்ளது. இதிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட பணியாற்றவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. 
source: ns7.tv