புதன், 30 ஜனவரி, 2019

அரியர் எழுதுவதில் மாற்றம்: பின்வாங்கியது அண்ணா பல்கலைக்கழகம் January 30, 2019

Image
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் அரியர் தேர்வெழுத விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், புதிய தேர்வு முறைப்படி முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாவிட்டால், அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது என தெரிவிக்கப்பட்டது. 2017 ஒழுங்குமுறைப்படி  அரியர் தேர்வு எழுத அதற்கு அடுத்த ஆண்டே வாய்ப்பு  தரப்படும் என்ற விவகாரம் மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக கூறி வந்ததோடு, இந்த புதிய நடைமுறையை எதிர்த்து கடந்த ஜனவரி 18ம் தேதி மாணவர்கள் போராட்டமும் நடத்தினர்.
மாணவர்கள் போராட்டத்தையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தகூட்டத்தில் அரியர் தேர்வெழுத விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. வரும் 6ம் தேதி நடைபெறும் சிண்டிகேட் குழு கூட்டத்தில் தடை நீக்கத்திற்கான அனுமதி வழங்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் குமார் அறிவித்துள்ளார்.

source: ns7.tv