பாஜகவின் ஆபரேஷன் தாமரை வெட்கக்கேடானது என நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் பாஜக 104 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றார்.
மக்களின் பிரச்சினைகளை பாஜக கண்டுக்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மிகவும் அவசியமா என கேள்வி எழுப்பிய பிரகாஷ் ராஜ், மக்கள் நலனில் முதலில் கவனம் செலுத்துங்கள் என கூறினார்.
இதையடுத்து, மக்களுக்கு நன்றாக தெரியும், வருபோகும் தேர்தலில் மக்கள் அதை நிரூபிப்பார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மக்களின் நலனுக்காக பாடுபடுவது போல் நாடகமாடுகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
source: ns7.tv