ஞாயிறு, 27 ஜனவரி, 2019

லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கும் 15 ‘ஆப்’கள்! January 24, 2019

Image
ப்ளே ஸ்டோரில் உள்ள 15 ‘ஆப்’கள் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன்களை இயக்க இயங்குதளம் முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் மிகவும் பிரபலமானவை. உபயோகிக்க எளிதாக உள்ள, கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் இந்த இயங்குதளத்தில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனிடையே கூகுள் நிறுவனம் ‘ஆப்’கள் சந்தை எனப்படும் ப்ளே ஸ்டோரில் உள்ள போலி செயலிகள், பாதிப்பு ஏற்படுத்தகூடிய மென்பொருகளை களையெடுத்து வருகிறது. 

இதில் முதற்கட்டமாக மக்களை ஏமாற்றி வசூல் செய்து வரும் 15 ஜி.பி.எஸ் ‘ஆப்’களை கண்டறிந்து வெளியிட்டுள்ளது. இதனை 5 கோடி பயனாளிகள் தரவிறக்கம் செய்ததுள்ளதாக கூகுள் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த 15 ஆப்களும் போக்குவரத்துக்கு வழி சொல்லக்கூடிய ஜி.பி.எஸ் ‘ஆப்’கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமை எதுவுமின்றி வெறும் கூகுள் நிறுவனத்தின் மேப் நேவிகேஷனை பயன்படுத்தி அதில் விளம்பரங்களை வெளியிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டிவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் விளம்பரங்கள் வரமால் இருப்பதற்காக பயனாளிகளிடமே வசூல் செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த வகை ‘ஆப்’களை உடனே தங்களது ஸ்மார்ட் போனில் இருந்து அகற்ற கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களை முட்டாளாக்கும் அந்த 15 ஜி.பி.எஸ் ‘ஆப்’கள் இவைதான்..
1➤ Voice GPS direction
2➤ GPS Route Finder
3➤ GPS Route Tracker
4➤ GPS Maps & Navigation
5➤ Maps GPS Navigation
6➤ Live Earth Map
7➤ Live Earth Map & Satellite
8➤ Traffic updates: GPS free maps
9➤ Free GPS, Maps & Navigation
10➤ GPS Satellite maps
11➤ Free GPS Maps- Star Play Creations
12➤ GPS Street View- Maps Go
13➤ Voice GPS Driving- Delta raza apps
14➤ GPS Live Street Maps
15➤ Free GPS Traffic updates

source http://www.ns7.tv/ta/tamil-news/technology-important-editors-pick/24/1/2019/15-apps-have-fooled-millions-android