source ns7.tv
பாகிஸ்தானில் வசித்துவந்த 101 வயது மூதாடி ஒருவர் 12 வருடங்கள் காத்திருந்து இந்திய குடியுரிமை பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1918ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தவர் ஜமுனா மாயி. இவரது குடும்பத்தினர், அவர் பிறந்த சில ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சென்று வேலை பார்த்துவந்துள்ளனர். ஆனால், கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, இந்து மதத்தை சேர்ந்த இவர்களை பாகிஸ்தானியர்களின் துன்பறுத்தத்தொடங்கினர். குறைவான ஊதியம், அதிக வேலை என சித்திரவதை செய்யத்தொடங்கினர். இதனால், கடும் அவதிக்குள்ளான ஜமுனா குடும்பத்தினர், 2000-ல் இந்தியா திரும்ப முடிவு செய்து 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா திரும்பினர்.
பாகிஸ்தானில் இருந்து வந்ததினால், இந்திய அதிகாரிகள் பல கேள்விகளை இவர்கள் மீது முன்வைத்தனர். இவர்களுக்கு, இந்தியாவில் வேலை பார்ப்பது கூட மிகவும் சிரமமாகி விட்டது. இந்தியக்குடியுரிமை பெற முயற்சித்த இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில், பாகிஸ்தானிற்கே சென்றுவிடலாம் என்ற அளவிற்கு கொடூர வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனாலும், இந்திய குடியுரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆண்டுகளை கடக்கத்தொடங்கினார் ஜமுனா மாயி. 12 ஆண்டு கால காத்திருப்பிற்கு பரிசாக கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய குடியுரிமையை பெற்றார் ஜமுனா. இந்தியக்குடியுரிமை கிடைத்த சந்தோஷத்தில், தன் குடும்பத்தினருடன் ஆடிப்பாடி கொண்டாடிமகிழ்ந்தார்.
தன் ஒரு மகன் இந்தியாவில் இருப்பதாகவும் மற்றொரு மகன் பாகிஸ்தானிலும் இருப்பதாக் தெரிவித்த ஜமுனா மாயி, இன்னொரு மகன் இந்தியாவிற்கு வருவதற்காகவும் உரிய ஏற்பாடுகளை செய்துவருவதாக தெரிவித்தார்.
source ns7.tv