சனி, 12 ஜனவரி, 2019

விண்வெளியில் இருந்து வரும் மர்ம ரேடியோ சிக்னல்...அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்! January 11, 2019

Image
விண்வெளியில் இருந்து புதிதாக ரேடியோ சிக்னல் பூமிக்கு வருவதாக அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
source ns7.tv
விண்வெளியில் இருக்கும் நட்சத்திரக்கூட்டம், பால்வெளி அண்டம் உள்ளிட்டவை குறித்து பலருக்கு பலவிதமான கேள்விகள் இருக்கும். ஆனால், அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அதனை மர்மமாகவே கவனித்துவரும் பொதுமக்கள் பெரும்பாலான சமயங்களில் விண்வெளியில் நடக்கும் சில அதிசயமான மற்றும் மர்மமான விஷயங்களை கண்டு ஆச்சரியமடைவர்.
பல அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும், சில மர்மங்களையும் நிகழ்த்துகிறது விண்வெளி. இந்த வகையில், 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வரும் மர்ம ரேடியோ சிக்னலை, கனடாவில் உள்ள ஒரு வித்தியாசமான டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இந்த ரேடியோ சிக்னல் எங்கிருந்து வருகிறது என்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை.
கடந்த ஆண்டு இதேபோன்று ஒரு ரேடியோ சிக்னல் வந்ததாகவும் அதுவே இந்த முறையும் திரும்பி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நட்சத்திரக்கூடத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த ரேடியோ சிக்னல், 13 ரேடியோ வேக அதிர்வுகளை (fast radio bursts) கொண்டதாக இருக்கிறது. இதுவரை 60 முறை இதுபோன்ற மர்ம ரேடியோ சிக்னல்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், ஒரேவகையான ரேடியோ சிக்னல், 2வது முறையாக வருவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்ம ரேடியோ சிக்னல்களை பற்றி பல கூடுதல் தகவலை வெளிக்கொண்டுவர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.