ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அந்த நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், வழக்கமாக 31ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து ஊழியர்களின் ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
source ns7.tv