வியாழன், 17 ஜனவரி, 2019

வேற்றுகிரகவாசிகள் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்! January 17, 2019

Image

பூமியை தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா?, என்ற ஆய்வு ஒருபக்கம் நடைபெறும் நிலையில், மறுபுறம் வேற்றுகிரகவாசிகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏலியன்கள் குறித்த வியப்பு தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது நாசா. 
நீண்ட காலமாகவே, வேற்றுகிரகவாசிகள் குறித்த கற்பனைக் கதைகளும், காமிக்ஸ் கதைகளும் வெளிவந்து படிப்பவர்களிடையே ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஏலியன்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஜனவரி 31-ம் தேதியன்று ஏற்பட்ட Blue Red Moon, என்னும் அரிய விண்வெளி நிகழ்வின் போது, நிலவின் அருகே ஏதோவொரு பொருள் பறப்பது போன்றும், நிலவை அது கண்காணிப்பது போன்றும், வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் பூமிக்கு அருகே, 'Barnard B' என்ற இரண்டாவது மிகப்பெரிய நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் புவிவெப்பச் சூடு மற்றும் குளிர்த்தன்மை இருப்பதற்கான சாத்திக்கூறுகளை, நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், அங்கு உயிரினங்கள், குறிப்பாக நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் ஏலியன்கள் இருக்கக்கூடும், என உறுதியாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
இந்நிலையில், வேற்றுகிரவாசிகள் உண்மையாகவே வாழ்கின்றனர் என்றும், அவர்கள் பலமுறை பூமிக்கு வந்து சென்றுள்ளனர் என்றும், நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனிடையே, மற்றொரு ஆய்வில் ஏலியன் பூமியில் இருந்து வெகு தொலைவில் இல்லை என்றும், அவர்கள் பூமிக்கு நெருக்கமான ஒரு கோளில் தான் இருக்க வேண்டும், என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு சமீபத்தில், வெறும் 6 ஒளி ஆண்டு தொலைவில் இருந்து, அதாவது விநாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில், 6 ஆண்டுகள் பயணிக்கும் தூரத்தில் இருந்து, ரேடியோ சிக்னல் கிடைத்திருப்பதை விஞ்ஞானிகள் மேற்கோள் காட்டுகின்றனர்.
'Barnard B' நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் வில்லநோவா பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் விஞ்ஞானிகள், இந்த புதிய கோளில் நிச்சயமாக ஏலியன்கள் வசிக்கக்கூடும் என உறுதிபடக் கூறுகின்றனர். இதில், உயிரினங்கள் வசிப்பதற்கான குளிர்த்தன்மை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'Barnard B' நட்சத்திரத்தில் மைனஸ் 238 டிகிரி குளிர்நிலை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து, ரேடியோ சிக்னலை ஏலியன்கள் பூமிக்கு அனுப்பியுள்ளனர். இதை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள, விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
இவ்வாறு வேற்றுகிரவாசிகள் தொடர்பான ஆய்வுகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், "ஏலியனீஸ்" (Alianese) என்னும் பெயரில், நாசா விஞ்ஞானிகள் தாமாக உருவாக்கிய ஒரு புதிய மொழியில், இந்த பூமி மற்றும் இங்கு வாழும் மனிதர்கள் பற்றிய படங்கள், தகவல்களை, பயோனியர் விண்கலம் மூலம் பூமிக்கு தொலைவில் உள்ள நட்சத்திரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் 'Barnard B' நட்சத்திரம் குறித்த புதிய ஆய்வுகளும், அதில் ஏலியன்கள் வசிப்பதாக நாசா விஞ்ஞானிகள் உறுதியாக நம்புவதும், வேற்றுக்கிரக ஆய்வில் நமக்கு பெரும் ஆச்சரியம் தரும் தகவல்களை அளிக்க வாய்ப்புள்ளது.
source ns7.tv