கோடநாடு விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ உண்மைக்கு புறம்பானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருந்த நிலையில் முறையான விசாரணை நடத்தினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றவாளி ஆவது உறுதி என ஆ.ராசா தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் கோடநாடு விவகாரம் தொடர்பாக திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் இன்று மாலை சந்தித்து பேசினர். அப்போது அவர் கோடநாடு மர்ம மரணங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா எப்போதும் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் இருக்ககூடிய பகுதி, அதன் பாதுகாவலர் கொல்லப்பட்ட போது ஒரு போலீசார் கூட அங்கு இல்லையா என ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
மேலும், கோடநாடு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தினால் முதல்வர் பழனிசாமி குற்றவாளி ஆவது உறுதி எனக்கூறினார். மேற்சொன்ன முதல்வருக்கு எதிரான அ.ராசாவின் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் 24 மணிநேர தடையில்லா மின்சார வசதி பெற்ற கோடநாடு எஸ்டேட்டில் சம்பவ நாளில் மட்டும் மினசாரம் தடைப்பட்டது எப்படி எனவும் ஆ.ராசா வினவியுள்ளார்.
திமுகவினர் தொடர்ந்து ஏதாவது பொய் வழக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என முதல்வர் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆ.ராசா, ஆளுங்கட்சியினரின் குற்றங்களை எடுத்துரைப்பது எதிர்க்கட்சியின் வேலை; தேதி அடிப்படையில் சம்பவம்களை ஆராய்ந்தாலே விசாரணை சரியான திசையில் செல்லும் எனவும், காவல் ஆணையர் யாருக்கு கீழ் பணியாற்றுகிறார், முதல்வரே ஏன் மனு கொடுக்க வேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளை முதல்வரை நோக்கி எழுப்பினார்.
இதனைதொடர்ந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
source : ns7.tv