source : ns7.tv
நிலவில் ஏற்படும் இரவு நேரக் குளிர்நிலையை அளவிட, சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
பூமியிலிருந்து பார்த்தால் வெண்மையாக காட்சி அளிக்கும் நிலா, பல்வேறு கறுப்பு பக்கங்களை தன்னகத்தே கொண்டு, சுழன்று கொண்டே இருக்கிறது. நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீனாவின் சாங் இ4 விண்கலம் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்து அனுப்புகிறது. இந்நிலையில், இதன் அடுத்தகட்டமாக, இரவு நேரங்களில் நிலவில் ஏற்படும் குளிர் நிலையை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில், சீன விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர்.
நிலவானது பூமியை சுற்றி வருவதும், தன்னைத்தானே சுற்றி வருவதும், இரே வேகத்தில் இருப்பதால், அதன் ஒரு பகுதி எப்போதும் இருண்டே காணப்படுகிறது. அதனை நிலவின் இருண்ட பகுதி என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாள்களுக்கு சமமானதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே போல, இரவு என்பது நிலவில் 14 நாட்கள் நீடிக்கும். அதன்படி, நிலவில், பகல் நேரத்தில் அதிகளவு வெப்பமும், இரவில், அதீத குளிரும் நிலவும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, நிலவின் மறுப்பக்கத்தை ஆய்வு செய்து வரும், சாங் இ 4 விண்கலத்தின் மூலம், நிலவில் ஏற்படும் குளிர்நிலையை ஆய்வு செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதற்காக, நிலவில் ஏற்படும் கடுமையான குளிரால், விண்கலம் பழுதடைந்துவிடாமல் இருப்பதற்காக, அதில் உள்ள வெப்ப மூட்டியைக் கொண்டு, உருவாக்கப்படும் மின் சக்தியைப் பயன்படுத்தி, குளிர்நிலையை துல்லியமாக கணக்கிட சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.