ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்கள், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை, வெளியில் வர முடியாது என, அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ராஜீவ்காந்தி கொலை விவகாரம் சாதாரண விஷயமாக கருத முடியாது என குறிப்பிட்ட அவர், பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, இந்த வழக்கின் தண்டனை குற்றவாளிகள் யாரும் வெளியில் வரமுடியாது என்றார்.
இதனிடையே, எழுவரை விடுதலை செய்யக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் 139 நாட்களை கடந்த பின்னரும், ஆளுநர் கையொப்பம் இட மறுப்பது ஏன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
source: http://www.ns7.tv/ta/tamil-news/india/27/1/2019/subramanian-swamy-said-about-rajiv-gandhi-assassination-case-victims