பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து நேற்று மாலை முதல் ஏராளமானோர் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் குறித்த விவரங்கள்:
➤பொங்கலை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.
➤சென்னையில் இருந்து ECR மார்க்கமாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்கின்றன. விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானட்டோரியத்தில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.
➤திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்
தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்கின்றன. வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.
தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்கின்றன. வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.
➤இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அதாவது, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.
➤சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை அடைவதற்காக 250 சிறப்பு இணைப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. கார்களில் செல்பவர்கள் தாம்பரம் வழியாக செல்லாமல் திருக்கழுக்குன்றம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source ns7.tv