திங்கள், 21 ஜனவரி, 2019

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! January 21, 2019

Image
இந்திய உணவுப் பொருட்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 
இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளது. 
இதனையடுத்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறான தகவல்கள் பரப்பும் கணக்குகள் மற்றும் பக்கங்களை முடக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பாலில் கலப்படம் போன்று பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருப்பதை அடுத்து, இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source ns7.tv