source ns7.tv
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு தொடர்பான புலனாய்வு வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சயான், மனோஜ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் மீதான புகாரை மறுத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சிகளின் சதிச் செயல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுதாக்கல் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமி மீதே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது என்றும் டிராபிக் ராமசாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.