பிரதமராக பதவியேற்ற பிறகு தமிழகத்திற்கு எப்போதெல்லாம் நரேந்திர மோடி வருகை புரிந்தார் என்பது குறித்த விவரங்கள்..!
ஆகஸ்ட், 2015 - சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
டிசம்பர் 2015 - பெரு வெள்ளத்தால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் பிரதமர் மோடி
டிசம்பர் 2016 - உடல்நலக்குறைவால் மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் பிரதமர் மோடி
பிப்ரவரி - 2017 - ஈஷா யோகா மையம் சார்பில் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நவம்பர் 2017 - தினந்தந்தியின் பவள விழாவில் பங்கேற்க சென்னை வந்தார், பின்னர் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று உடல்நிலை குறித்து விசாரித்தார்.
ஏப்ரல் 2018 - சென்னையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது காவிரி விவகாரம் உச்சத்தில் இருந்த நிலையில் சென்னை வந்த மோடிக்கு எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 2018 - உடல்நலக்குறைவால் காலமான திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார்
ஜனவரி 2019 - மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரை வர இருக்கிறார்.
source: http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu-important-editors-pick/27/1/2019/how-many-times-did-modi-visited-tamil-nadu-pm