2015 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரி தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் 30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்யும் வெளி நாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் பெறுவதாகவும், தமிழக இளைஞர்கள் பயன் அடையவில்லை என்றும் குற்றம்சாட்டியது. இதனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்கவும் கோரிக்கை விடுத்தன.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், 2015ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை தொழில்கள் துவங்கப்பட்டன என கேள்வி எழுப்பினர். மேலும், 2015ல் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன எனவும் வினவினர். இது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.
source: ns7.tv