source: ns7.tv
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக அம்மாநில அமைச்சர் சிவக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், "ஆபரேஷன் லோட்டஸ்" என்ற நடவடிக்கையை பாரதிய ஜனதா மேற்கொண்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேரை, பாரதிய ஜனதாவினர் கடத்திச் சென்று, மும்பை ஓட்டலில் அடைத்துவைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்களை பலரை இழுக்க பாரதிய ஜனதா கட்சியினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சில எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை எனவும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார். இதனால், கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.