source ns7.tv
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மதுரா பகவந்தபுரம் கிராமத்தின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதனை வேறு பகுதிக்கு அல்லது ஒதுக்குப்புறமாக மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அரசு மருத்துவமனை மற்றும் நடுநிலைப் பள்ளி அருகில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மதுரா பகவந்தபுரம் கிராமத்தின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதனை வேறு பகுதிக்கு அல்லது ஒதுக்குப்புறமாக மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில். தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் ஊரின் மையப்பகுதியில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு மிகுந்த இடையூறாக இருக்கும் என்றும் பறவை இனங்களான சிட்டு குருவி, குயில் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் அழியும் நிலை ஏற்படும் என்றும் எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.