Home »
» கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா விராலிமலை ஜல்லிக்கட்டு? January 12, 2019
விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா என்பதை மதிப்பிட, லண்டனில் இருந்து மதிப்பீட்டாளர்கள் வருகை தர உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பட்டமரத்தான் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டை ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போட்டில் சுமார் 2 ஆயிரம் காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் இருசக்கர வாகனம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
source ns7..tv
Related Posts:
போலி வழக்கை கண்டித்து
இஸ்லாமிய ஜனநாயக முன்னணி,மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர்.மதுக்கூர் மைதீன் அவர்கள் மீது போலி வழக்கு போட்டு,சிறை சாலைக்குள் தள்ளிய பட்டுக்கோட்டை ASP ம… Read More
அமெரிக்க விமானத்தில் இருந்து முஸ்லிம் குடும்பம் வெளியேற்றம்
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பாதுகாப்புக் கருதி 5 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தினரை விமான ஓட்டி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… Read More
2016 சட்டமன்ற தேர்தல்
இன்று காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெஜ்.ராஜா , தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க… Read More
Quran
(நபியே!) மதுபானத்தையும்,சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது.(திருக்குர்ஆன் : 2 … Read More
உடனே விடுதலை செய்!!
கருத்து ரீதியால் முரண்பாடுகள் இருந்தாலும் பொது எதிரியான பாசிச சங்பாரிவாரினரின் முன் என் சகோதரனை விட்டு கொடுக்க மாட்டோம்!!
போலி வழக்கில் கைது செய்யப… Read More