டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடுமையான குளிர் நிலவுவதால் எங்கு பார்த்தாலும் பனிமூட்டமாக காட்சியளிக்கிறது.
காலையில், 100 மீட்டருக்கு தொலைவுக்கு மேல் எதுவும் கண்களுக்கு புலப்படாத காரணத்தால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியிவிட்டபடி ஊர்ந்து சென்றன. பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த இருநாட்களுக்கு டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
SOURCE NS7.TV