திங்கள், 28 ஜனவரி, 2019

தென் மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிவு! January 28, 2019

Image
தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 800 என்ற அளவில் சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பதிவுத்துறை சேகரித்த தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலேயே ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆந்திராவில், 974 ஆக இருந்த பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 2016-ம் ஆண்டு 806 ஆக உள்ளது. கர்நாடகாவில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் ஆயிரத்து நான்காக இருந்த நிலையில். 2016ம் ஆண்டு 896 ஆக சரிந்துள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரையில், 2007ம் ஆண்டு 935 ஆக இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் 840 ஆக உள்ளது. ஒடிசாவில் 858 ஆகவும், உத்தரகாண்டில் 869 ஆகவும் உள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே, ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 800 ஆக குறைந்து மோசமான நிலையை எட்டியுள்ளது. கேரளா மற்றும் சத்தீஸ்கரில் அதிக பெண் குழந்தைகள் பிறப்பதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://ns7.tv/ta/tamil-news/india-important/28/1/2019/girl-child-birth-rate-lowered-south-india