வெள்ளி, 18 ஜனவரி, 2019

குமரி கடற்பகுதியில் கடும் பனிமூட்டம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! January 18, 2019

Image
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடற்பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

குளச்சல் துறைமுகத்திலிருந்து, குளச்சல், குறும்பனை, கோடிமுனை, கொட்டில்பாடு, மண்டைக்காடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுவதால், மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். இன்று அதிகாலை 2 மணிக்கு கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள், பனிமூட்டத்தால் கடற்பகுதி முழுவதும் இருண்டு காணப்பட்டதை அடுத்து, கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SOURCE NS7.TV

Related Posts:

  • ????? CV/Resume/Bio data Read More
  • make any shot by just 1 blink கூகுள் கண்ணாடியில் கண்சிமிட்டலில் புகைப்படம் எடுக்கும் புதிய வசதி கூகுள் கிளாஸ் எனப்படும் அணிந்து கொள்ளும் வகையிலான கணினியில் புதிய தொழி்ல்நுட்… Read More
  • வானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை. بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِالَّذِينَ يَذْكُرُونَ اللّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ … Read More
  • Hadis அல்லாஹ்வைப் பற்றி எச்சரிக்கை செய்தல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக் காரியத்தைச் … Read More
  • மது அடிமைத்தனம்  டாக்டர் ஜி. ஜான்சன்                    … Read More