
source ns7.tv
கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் உயிர்காக்கும் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியதால், வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. கூலித் தொழிலாளியான இவரது மகன் மேகநாதன் பண்ணப்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் ஒரு கருவியை இவர் கண்டுபிடித்துள்ளார்.
போபாலில் நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெற்ற இவரது கண்டுபிடிப்பு ஆறாம் இடத்தைப் பிடித்தது. இதையடுத்து சுவீடன், பின்லாந்து ஆகிய வெளிநாடுகளில் கல்வி சுற்றுலா செல்வதற்கு மேகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.